தகவல் பலகை



Information Board

Join is in Facebook Group

29 years ago

STYC will be holding its annual Tamil Youth Conference it's third - which is a significant event on 29 Dec 90, at the World Trade Centre Conference Hall. The theme is "The History of Tamils'.

STYC is determined to promote serious scholarship and an understanding of the Tamil community. Hence, this conference will bring together concerned writers, journalists, scholars and committed leaders to contribute to the documentation of the various facets of the ethnic Indian Singaporean community.

Singapore Tamils 200 - Vol 2

எழுத்தாளர், ஆய்வாளர், ஆர்வலர் அழைப்பு

Call for Writers & Contributors

Singapore Tamils 200 - Volume 2

சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் - தொகுதி இரண்டு

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், நவீன சிங்கப்பூரின் 200-வது ஆண்டு (1819-2019) விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் என்ற முதல் தொகுதி நூலை சனிக்கிழமை 28 திசம்பர் 2019-ஆம் நாள் வெளியிட உள்ளது. முதல் தொகுதி நூலை எழுதுவதிலும் தயாரிப்பதிலும் 166 எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும், ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்தனர். இந்த நூலின் தொகுப்பாசிரியர்களாக பேராசிரியர் அ. வீரமணி, மாலதி பாலா, பாலதண்டாயுதம் ஆகியோர் பணியாற்றினர். முதல் தொகுதி, 200 மாமனிதர்கள் சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த அரும் பணியினை தொகுத்து வெளியிடுகிறது.

சிங்கப்பூரில், 200-க்கும் அதிகமானோர், தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி உள்ளனர். அடுத்த 2-வது தொகுதியில் மேலும் 200 மாமனிதர்களின் பங்களிப்பு எழுதப்படும். இரண்டாவது தொகுதியை வெளியிடும் நோக்கத்தில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் எழுத்தாளர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

இரண்டாவது தொகுதி தயாரிப்பில் தங்களை நாங்கள் வரவேற்கிறோம். இரண்டாவது தொகுதியை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நாம் கலந்து ஆலோசிப்போம். தங்களுடைய பணி என்னவென்பதை விளக்குவோம். தயவுசெய்து பின் வருபவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

The Singapore Tamil Youths’ Club is commemorating Singapore bicentennial (1819 - 2019). Volume 1 of the Singapore Tamils 200 will be published on Saturday 28th December 2019. The book was prepared by 166 writers & researchers. Most of them were students, teachers and interested people. The editors were Professor A. Veeramani, Malathi Bala & Balathautham TAM. The volume consists of 200 individuals who have contributed to the development of Tamil language and welfare of Tamils since 1940.

The Singapore Tamil Youths’ Club realises that there are more than 200 individuals who must have contributed much to Tamil language and Society in Singapore. We are organising the next committee of writers and researchers to document the next 200 people.

We welcome you to join our Volume 2 team. We hope to publish Volume 2 by June 2020. Please contact us. We will discuss and guide you.

‘’ மலாயா மான்மியம் ‘’


‘’ மலாயா மான்மியம் ‘’ புத்தக வெளியீடு 23/02/2019 அன்று இந்திய மரபுடைமைச் சங்கத்தில் கோலாகலமாக நடந்தேறியது. நெறியாளர் செல்வி. ரோஸ்னா பேகம் அறிமுக உரை ஆற்றினார். அடுத்ததாக சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் இணைத் தலைவரான திருமதி. மாலதி பாலா அவர்கள் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றிய சிறப்புகளை நயமாக எடுத்துரைத்தார். பேராசிரியர் அ. வீரமணி அவர்கள் ‘மலாயா மான்மியம்’ நூல் உருவான வரலாற்றை விரிவாக விளக்கினார். அடுத்து, நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக நூல் வெளியீடு இடம்பெற்றது. முதல் நூலை தலைமைப் புரவலர் திருமதி பானுமதி இராமசந்திராவுக்கு (ஆனந்த பவன் உரிமையாளர்) பேராசிரியர் அ.வீரமணி வழங்கினார்.

அடுத்ததாக தமிழரின் மூத்தத் தலைமுறையைச் சார்ந்த முன்னாள் நேபாளத் தூதர் திரு. எம். என். சுவாமி அவர்களுக்கும், தற்கால சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் பெருநிதி வழங்கி வரும் திரு. ஹாஜி ஜலில் அவர்களுக்கும், மலாயா மான்மியம் நூலில் பெரும் பணக்காரராக விளங்கும் மாமனிதர் திரு. இராமசாமி நாடார் அவர்களின் பேரன், தமிழ் திரைப்பட நாயகர் திரு. சரத்குமார் அவர்களுக்கும் பேராசிரியர் அ. வீரமணி அவர்களால் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த திருமதி ஏஞ்சல் இஸ்கூலிங் பெருமாள் அவர்களுக்கும், திருமதி பானுமதி இராமசந்திரா அவர்களுக்கும், திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் சிங்கப்பூர் இளையர் மன்றத்தில் புதிதாக இணைந்துள்ள இளையர்கள் பூங்கொத்துகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

அடுத்த நிகழ்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாமனிதர் தந்தை திரு. பொன்னம்பலம் அவர்களை நினைவு கூறும் மகன் திரு. ச.பொ.சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரமுடியாத காரணத்தினால் காணொளிக் காட்சி வழியாக தன் தந்தை தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்தார். பிறகு செல்வி. பிரான்சிஸ்கா லாசரால், மாமனிதர். அ.சி.சுப்பையா அவர்களின் கட்டுரை அழகிய தமிழில் வாசித்துக் காட்டப்பட்டது. அடுத்ததாக, திரு. இராமசாமி நாடார் அவர்களின் சமூகத் தொண்டினை நினைவு கூறும் பேத்தி திருமதி ஏஞ்சல் இஸ்கூலிங் பெருமாள் தனது தாத்தாவைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் மொழிக்கும் தொண்டாற்ற இளையர்கள் முன்வருவது பாராட்டத்தக்கது என்றும், நூறாண்டு கால வரலாற்றை மலாயா மான்மியம் நூலின் வழி அறிந்து கொண்டது போல சிங்கப்பூர் தமிழ் இருநூற்றுவர் என்ற தலைப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் நூல் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மலாயா மான்மியம் நூல் வெளியீடு

Glorious Malaya Book Launch

23 February 2019

யார் இவர்கள் ?

சிங்கப்பூர்த் தமிழர் 2-நூற்றுவர்

ஆராய்ச்சி கருத்தரங்கு தொடர் 1

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் (STYC), தனது எட்டு வார ஆராய்ச்சி கருத்தரங்கத் தொடரின் முதல் வார கருத்தரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை 6 ஜனவரி 2019-ஆம் நாள் சிம் லிம் சதுக்கத்தில் [Sim Lim Square] உள்ள STYC அலுவலகத்தில் தொடங்கியது. இது இளையர் மன்றத்தின் புதிய அலுவலகத்தில் நடத்திய முதல் நிகழ்ச்சியாகும். ஆய்வரங்கத் தொடர் இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. மொத்தம் 8 ஆய்வாளர்கள் 10 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர். சிங்கப்பூர் தமிழர் இரு நூற்றுவர் நூல் (Singapore Tamils 200) பதிப்புக் குழுவின் பேராசிரியர் அ. வீரமணி, ஆசிரியை மாலதி, ஆசிரியை சாந்தா, ஆசிரியை ரோசினா பேகம் ஆகியோர் கட்டுரைகள் சிறப்பாக அமைய கருத்துரை வழங்கினர். மொத்தம் 25 பேராளர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் நெறியாளர்களாக திரு பிரணவன் சிவலிங்கம், செல்வி கிருபாகரன் ஹரிணி பங்காற்றினர். மற்றும் திரு நவீன் தமிழ்ச்செல்வன் (தொழில்நுட்ப ஆதரவு), திரு. ஜயதர்மிக் அழகர்சாமி, திரு.ஃபரித் அஹமட் ஷாபிர் ஏ (பதிவு செய்தல்), திரு சசிபாலன் (புகைப்படம் எடுத்தல்) ஆகியோரின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. செல்விகள் கிருபாகரன் ஹரினி மற்றும் அலெக்ஸாண்டர் ராயப்பா ஷர்மீலா ஜோஸ் ஆகியோர் நிகழ்வின் தொடக்கத்தில் "சின்னஞ்சிறு கிளியே" என்று தொடங்கும் மகாகவி பாரதியாரின் கவிதையை பாடினர்.

இரு பகுதிகளாக நடைப்பெற்ற ஆராய்ச்சி ஆய்வரங்கத் தொடர் பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுற்றது.

-கே.யாழினி, சமித்ரா

Research Seminar Series 1

Singapore Tamil Youths’ Club (STYC) held its first and second Research Seminar Series on the 6th of January 2019 at the Sim Lim Square STYC office. This was the first event hosted at the new office. Speakers were invited to present the research work to the Editorial Team. A total of 8 speakers presented a total of 10 research papers. The Editorial Team comprising of Prof A Veeramani, Ms Malathi d/o Velu, Mdm Santha Suppiah and Mdm Rosina Bakam gave constructing feedback on the research and presentations.

A total of 25 delegates attended the Seminar Series presentation. The event was coordinated by Mr Pranaven Sivalingam and Ms Kirubakaran Harini with the assistance of Mr Naveen Tamilselvan (Technical Support), Mr Jayadharmik Alagarsamy, Mr Fareed Ahamed s/o Shafir A (Registration) and Mr Sasibalan (Photography). We also want to thank Ms Kirubakaran Harini and Ms Alexander Rayappa Sharmila Jose for their opening song, Chinnanchiru Kiliye.

Article by Mr Pranaven.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் - தகவல் பலகை

Singapore Tamil Youths' Club - Information Board

86189594 ( WhatsApp / புலனம் ) எண் வழி உறுதிப்படுத்தவும்.


Commemorating 60 years of STYC contributions towards the 'NEW SOCIETY among Singapore Tamils'.

Event on Saturday 23 December 2017.